கிளிநொச்சி, பளை பாடசாலையொன்றில் கல்வி பயிலும் மாணவிகள் சிலர் தமது ஆண் நண்பர்களின் பெயரை தமது தொடையில் நெருப்பில் சூடு வைத்து பொறித்த நிலையில் பாடசாலை நிர்வாகத்தால் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
15 வயதான மாணவிகளே இவ்வாறு ஆண் நண்பர்களின் பெயரை பொறித்துள்ளனர்.
பாடசாலை நிர்வாகத்தினருக்கு கிடைத்த தகவலையடுத்து விசாரணையில் 5 மாணவிகள் அடையாளம் காணப்பட்டனர்.
தாம் பெயர்களை பொறிக்கவில்லை. ஆங்கில எழுத்துக்களை மாத்திரமே பொறித்தோம் என தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து மாணவிகள் எச்சரிக்கப்பட்டதையடுத்து அவர்களது பெற்றோரும் அழைக்கப்பட்டு அறிவுரை வழங்கப்பட்டது.