கிளிநொச்சியில் பொலீஸார் மக்கள் மோதல் பலர் காயம்!
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டக்கச்சி இராமநாதபுரம் பகுதியில் வீட்டில் கசிப்பு இருப்பதாக தெரிவித்து இளைஞரைக் கைது செய்ததால் போலீசாருக்கும் வீட்டிலிருந்தவர்களுக்குமிடையே முறண்பாடு ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவம் நேற்று மாலை நிகழ்ந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது:-
இதனையடுத்து பொலிசார் குறித்த வீட்டிலிருந்த கர்ப்பினிப் பெண் மற்றும் மாற்றுத்திறனாளியான இளைஞரின் தாயார் மீதும் பொலிசார் தாக்குதல் மேற்கொண்டதாகவும் இதனால் கிராம மக்கள் பொலிசார் மீது தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப் படுகிறது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸ் உயரதிகாரிகள் நிலமைமையக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததுடன் 912 லீற்றர் கசிப்பும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரனங்களும் பொலிசாரல் கைப்பற்றப்பட்டுள்ளன.