முல்லைத்தீவு மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களையும், இளைஞர்களையும் இலக்கு வைத்து போதை மாத்திரை வியாபாரம் செய்து வந்த நபர் ஒருவர் நேற்று (21) பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.
புதுக்குடியிருப்பு நேசன் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் குறித்த நபர் 300 போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பகுதியில் உள்ள பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆடைதொழிற்சாலை ஊழியர்களை இலக்கு வைத்து குறித்த சந்தேக நபர் போதை மாத்திரை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதேவேளை குறித்த நபர் வைத்திருந்த ஒரு போதை மாத்திரையினை 250 ரூபாவுக்கு நகர் பகுதியில் விற்பனை செய்து வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் சந்தேக நபர் புதுக்குடியிருப்பு பகுதியில் பல்வேறுபட்ட இடங்களில் போதை மாத்திரை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.