By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: 2024 IPL லீக்கில் முதல் வெற்றியை பதிவு செய்தது லக்னோ!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

2024 IPL லீக்கில் முதல் வெற்றியை பதிவு செய்தது லக்னோ!

Published March 31, 2024
Share
2 Min Read
SHARE

17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் லக்னோவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இதில் நாணயசுழற்சியில் வென்ற லக்னோ அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரர்களாக குயின்டன் டி கொக் , கே.எல். ராகுல் ஆகியோர் களமிறங்கினர்.

தொடக்கத்தில் கே.எல்.ராகுல் 15 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த படிக்கல் 9 ஓட்டங்களில் வெளியேறினார். பின்னர் வந்த ஸ்டாய்னிஸ் 19 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். மறுபுறம் டி கொக் சிறப்பாக நிலைத்து ஆடி ஓட்டங்களை குவித்த அவர் அரைசதமடித்த நிலையில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து நிக்கோலஸ் பூரன் , குருனால் பாண்டியா இருவரும் இணைந்து அதிரடி காட்டினர். பந்துகளை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்டனர்.

இதனால் லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 199 ஓட்டங்களை குவித்தது. நிக்கோலஸ் பூரன் 21 பந்துகளில் 42 ஓட்டங்களும், குருனால் பாண்டியா 22 பந்துகளில் 43 ஓட்டங்களும் எடுத்தனர் . பஞ்சாப் அணி சார்பில் சாம் கரன் 3 விக்கெட்டும் , அர்ஷிதீப் சிங் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

தொடர்ந்து இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்தனர். தவான் – பேர்ஸ்டோ இருவரும் இணைந்து 102 ஓட்டங்களை பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், பேர்ஸ்டோ 42 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய வீரர்களில் பிரப்சிம்ரன் சிங் 19 ஓட்டங்களுடனும், ஜித்தேஷ் 6 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் தவான் போராடினார். ஆனால் மற்ற வீரர்களில் யாரும் அவருக்கு பெரிய அளவில் ஒத்துழைக்கவில்லை.

முடிவில் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ஓட்டங்களை மட்டுமே அடித்தது. இதன் மூலம் 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற லக்னோ 2-வது போட்டியில் விளையாடி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக தவான் 70 ஓட்டங்கள் அடித்தார். லக்னோ தரப்பில் மயங்க் யாதவ் 3 விக்கெட்டுகளும், மோஷின் கான் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றி அசத்தினர்.

TAGGED: முதல் வெற்றியை பதிவு செய்தது லக்னோ!
Editor S.Shanuja March 31, 2024 March 31, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article வடக்கின் சில பகுதிகளில் பிற்பகல் மழை!
Next Article சமாதானத்தை நிலைநாட்ட அனைவரும் ஒன்றிணைக! ஈஸ்டர் வாழ்த்துச்செய்தியில் ரணில் தெரிவிப்பு!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

இந்திய செய்திகள்விளையாட்டுச் செய்திகள்

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு – விராட் கோலியின் முக்கிய முடிவு!

May 13, 2025
யாழ்ப்பாணம்விளையாட்டுச் செய்திகள்

தென்னாப்பிரிக்காவில் பழு தூக்கல் போட்டி: யாழ்  இளைஞன் சாதனை!

October 13, 2024
இலங்கைச் செய்திகள்விளையாட்டுச் செய்திகள்

சர்வதேச ரி 20 தொடரில் தசுன் ஷானக்க இல்லை!

October 10, 2024
இலங்கைச் செய்திகள்விளையாட்டுச் செய்திகள்

மகளிர் இருபதுக்கு20 உலகக்கிண்ணப் போட்டிகள் ஆரம்பம்!

October 3, 2024
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?