சிலாபம் – 15 செப்டம்பர் 2025
சிலாபம் பகுதியில் சிறுமி மீது சட்டவிரோத கருக்கலைப்பு நடத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக 20 வயதுடைய இளைஞன் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிலாபம் பொலிஸார் தெரிவித்ததாவது, 15 வயதுடைய சிறுமி திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சிலாபம் பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அண்மையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனையில், சட்டத்திற்கு முரணான கருக்கலைப்பு மருந்து பயன்படுத்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில், சந்தேக நபராக 20 வயது இளைஞன் ஒருவர் 12 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
பொலிஸார் விசாரணை முடிந்த பின், அவர் சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் என தெரிவித்துள்ளனர்.