அமெரிக்க மக்கள் உக்ரைன் மக்களின் இரும்பு போன்ற மன உறுதியிலிருந்து உத்வேகம் பெற வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்தார்.
உக்ரைன் தலைநகரை புட்டினால் ராங்கிகள் மூலம் சுற்றி வளைக்க முடியும் எனவும் ஆனால் அவரினால் உக்ரைன் மக்களின் இதயத்தையும், ஆன்மாவையும் வெற்றி கொள்வதற்கு முடியாது எனவும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான மூர்க்கத்தனமான தாக்குதல்களினால் உக்ரைன் பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது இந்நிலையில் உலக நாடுகள் பலவும் ரஷ்யாவின் இந்த மிலேச்த்தனமான தாக்குதலுக்கு கண்டனம் வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.