விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினருக்கு ஆயுள் தண்டனை!
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினரான தங்கவேலு நிமலன் என்பவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை தீர்ப்பு வழங்கியுள்ளது. இவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர் எனவும், உடமையில் இரண்டு கிலோ வெடிமருந்தினை வைத்திருந்தார் எனவும் இவர் மீது 2011ம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இவர் மீது மேலும் பல குற்றச்சாட்டுக்கள் விசாரிக்கப்பட்டு வருகிறது.
2007 ம் ஆண்டு இரத்மலாணைப் பகுதியில் விசேட அதிரடிப் படையினர் மீதான கிளைமோர் தாக்குதல். 2009 குருநாகலில் ஜனாதிபதியை இலக்குவைத்து குண்டுத்தாக்குதலை மேற்கொள்ள முயற்சித்தார் எனவும் இவர் மீது குற்றம் சாட்டப்பட்டு விசாரணை இடம்பெற்று வருகின்றன.
அரசியல் கைதிகளை விரைவில் விடுதலை செய்வோம் என நீதி அமைச்சர் உட்பட பல அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.