தமிழ் இளைஞனை இரகசியமாக நாடுகடத்தியது சுவிட்சர்லாந்து!
சுவிட்சர்லாந்திலிருந்து தமிழ் இளைஞர் ஒருவர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் நிட் வால்டன் மாநிலத்தில் அகதி தஞ்சம் கோரி வசித்து வந்தவரே இரகசியமான முறையில் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.
அகதி அந்தஸ்து கோரி அதிகாரிகளைச் சந்திக்கச் சென்ற போது அவர் கைது செய்யப்பட்டதுடன் இரகசியமாக இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டார் என்று அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
சுவிட்சர்லாந்தின் இந்த நடவடிக்கை தமிழர்களிடையே அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.