வெற்றி வாகை சூடி சம்பியனாகியது வடக்கு!
இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்று வந்த உதைபந்தாட்ட தொடரில் சம்பியனாகியது வடக்கு அணி.
இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் மாகாணங்களுக்கிடையிலான சுதந்திர கிண்ண உதைபந்தாட்ட தொடரின் இறுதியாட்டத்தில் வடக்கு மாகாண அணி மற்றும் தென் மாகாண அணி மோதிக் கொண்டது.
வடக்கு அணி 3-1 என்ற கோல் கணக்கில் வடக்கு மாகாண அணி வெற்றிபெற்று சம்பியனாகியது. இறுதியாட்டத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் உட்பட பல பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
வடக்கிற்கு பெருமைசேர்த்த வடக்கு மாகாண அணி வீரர்களுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்துவருகின்றனர்.