இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (01) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 295 ரூபாய் 57 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 305 ரூபாய் 10 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 371 ரூபாய் 56 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 386 ரூபாய் 95 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 317 ரூபாய் 11 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 330 ரூபாய் 87 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 217 ரூபாய் 01 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 226 ரூபாய் 96 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 190 ரூபாய் 73 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 201 ரூபாய் 00 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 217 ரூபாய் 25 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 227 ரூபாய் 90 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
அதேபோல் இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளும் டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகளை வெளியிட்டுள்ளன.
அதன்படி மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 294.93 ரூபாயிலிருந்து 294.59 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 304.91 ரூபாயிலிருந்து 304.56 ரூபாயாகவும் குறைவடைந்துள்ளது.
கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 294.46 ரூபாயிலிருந்து 294.21 ரூபாயாகவும் குறைவடைந்துள்ளவேளை விற்பனைப் பெறுமதி 303.75 ரூபாயிலிருந்து 303.50 ரூபாயாகவும் குறைவடைந்துள்ளது.
சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகள் முறையே, 295.50 ரூபாய் மற்றும் 304.50 ரூபாயாக மாறாமலுள்ளமை குறிப்பிடத்தக்கது.