யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியில் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் வீட்டில் இருந்த சொத்துக்களுக்கு சேதம் விளைவித்து விட்டு தப்பி சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (03) இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இரண்டு மோட்டார் சைக்கிள்களில் ஐந்திற்கும் அதிகமான வன்முறை கும்பல் இந்த வீட்டிற்கு நுழைந்துள்ளனர்.
பின்னர், வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள், துவிச்சக்கரவண்டி ,ஜன்னல் கண்ணாடிகள் , மீன் தொட்டி , தையல் இயந்திரம் என்பவற்றையும் அடித்து உடைத்து சேதமாக்கி விட்டு தப்பி சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.