ஜனாதிபதி பதவி விலகுவாரா? ஜனாதிபதியின் பேச்சாளர் விளக்கம்!
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச பதவி விலகுவது தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பரவும் செய்திகளை ஜனாதிபதியின் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க மறுத்துள்ளார்.
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச பாரதூரமான பிரச்சினைகளில் இருந்து தப்பி ஓடியவரல்ல. இன்று நாடு எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் ஜனாதிபதி கவனம் செலுத்துகின்றார்.
நாட்டினை மேலும் சீர்குலைக்கும் நோக்கில் சிலர் வதந்திகளை பரப்பிவிடுகின்றனர். இவ்வாறான வதந்திகளை நம்பாதீர் என தெரிவித்துள்ளார்.