தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது.
இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 25ம் திகதி தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது.
இந்த அமைப்பு மேலும் தீவிரமடைந்து இலங்கையின் வடக்குக் கடற்கரையை நோக்கி நகரலாம். g
மேற்குறிப்பிட்ட முறைமையின் தாக்கம் காரணமாக கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கு அதிகமான கடும் மழை பொழியக்கூடும்.
மன்னாரிலிருந்து காங்கேசன்துறை, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் பொத்துவில் ஊடாக அம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புக்களில் காற்றின் வேகமானது அவ்வப்போதுகளில் மணித்தியாலத்துக்கு 60 – 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதனால் அவை மிகவும் கொந்தளிப்பாகவும் உயர்வாகவும் காணப்படும்.
இந்தப் பகுதிகளில் மிகக் கனமழை அல்லது இடியுடன்கூடிய மழை பெய்யக்கூடும். நவம்பர் 24 ஆம் திகதி முதல் மறு அறிவித்தல் வரை மன்னாரிலிருந்து காங்கேசன்துறை, திருகோணமலை, மட்டக்களப்பு மற“றும் பொத்துவில் ஊடாக அம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளுக்கு செல்ல வேண்டாம் என கடற்கரையோர மற்றும் மீனவ சமூகங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.