“வலிகாமம் மேற்கு பிரதேச சபை எல்லைக்குள் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றோம். நேற்றைய நாளிலிருந்து (10) அடுத்து வரும் நாட்களில் உங்கள் வர்த்தக நிலையங்கள் என்பன பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளன எனவே உங்கள் பகுதியில் உள்ள நிறைந்த பொருட்களை உடனடியாக அகற்றுங்கள்” என வலிகாமம் மேற்கு பிரதேச சபையினர் தெரிவித்துள்ளனர்.
நீரேந்து பொருட்களான தகரங்கள், பேணிகள், சிரட்டைகள், பழைய டயர்கள், வெற்றுப் போத்தல்கள் மற்றும் இளநீர் கோம்பைகள் போன்ற பொருட்களை உடனடியாக அகற்றி டெங்கு நுளம்பு பெருகுவதை கட்டுப்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
இன்று நீரேந்து பொருட்களை அகற்றுவதற்கு வாகன வசதிகள் பிரதேச சபையினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க தவறும்பட்சத்தில் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட உள்ளமையினால் இதனால் ஏற்படும் விளைவுகளுக்கு நாம் பொறுப்பாளிகள் இல்லை என்பதை மன வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம் என வலிகாமம் மேற்கு பிரதேச சபையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.