5வது மாடியிலிருந்து குதித்து பெண் மரணம்!
வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுப் பிரிவின் 5ம் மாடி அலுவலகத்திற்கு சென்றவர் 5வது மாடியிலிருந்து குதித்து உயிரிழந்துள்ளார்.
நிதி மோசடி தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக சென்ற பெண் ஒருவரே குதித்து உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.