சமூக ஊடக செயற்பாட்டாளர்களிற்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவது நியாயமா? என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்ற உரையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
தேர்தலின் போது தெரிவிக்கப்பட்ட விடயங்களுக்கும் தற்போது இடம்பெறும் விடயங்களிற்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது.
பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக நீக்கப்படும் என முன்னர் தெரிவித்திருந்தார்கள்,ஆனால் தற்போது ஊடக சுதந்திரத்தை கருத்துவெளிப்பாட்டு சுதந்திரத்தை பொதுமக்களின் உரிமைகளை கட்டுப்படுத்த பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துகின்றனர்.
சமூக ஊடகங்கள் மூலம் கிடைத்த ஆதரவு காரணமாகவே உங்களிற்கு இந்த ஆணை கிடைத்தது.
சமூக ஊடக செயற்பாட்டாளர்களிற்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவது நியாயமா?