வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று முதல் மழை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்கு வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் உருவாகிய குறைந்த காற்றழுத்த மண்டலம் மேலும் வலுவடைந்து எதிர்வரும் 11 ஆம் திகதியளவில் இலங்கை – தமிழக கடற்பரப்பை அடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
தென்மேற்கு வங்காள விரிகுடாவின் கடற்பகுதிகளில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தொடர்ந்தும் நீடிப்பதனால் மீனவர்கள் மற்றும் கடல்சார் பணியாளர்கள் குறித்த பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, குறித்த கடற்பகுதிகளில் காற்றானது 60 கிலோமீற்றர் வரையான வேகத்தில் அதிகரித்து வீசக்கூடுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.