கிளிநொச்சியில் சைகை மொழியை அரச மொழியாக அனைத்து இடங்களிலும் பயன்படுத்த வலியுறுத்தி கவனயீர்ப்பு பேரணியும் விழிப்புணர்வு கூட்டமும் புதன்கிழமை (18) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில், சைகை மொழி பேசுபவர்கள் 5000க்கும் மேற்பட்டோர் இருக்கின்ற போதும் அந்த மொழி அங்கீகரிக்கப்படாது அவர்கள் அரச திணைக்களங்களிலும் ஏனைய இடங்களிலும் சேவைகளைப் பெற்றுக் கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றது.
சைகை மொழியை அங்கீகரிக்க கோரி கிளிநொச்சி நகர விளையாட்டு மைதான முன்றலில் இருந்து குறித்த விழிப்புணர்வு பேரணி பசுமை பூங்காவளாகம் வரை சென்றடைந்து பசுமை பூங்கா வளாகத்தில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது
இதில் முதன்மை விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் கலந்து கொண்டார். தொடர்ந்து ஜனாதிபதிக்கான மகஜரும் கையளிக்கட்டதுடன் மேலும், இலங்கையின் அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த சைகை மொழி பேசுபவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.