நாட்டில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்காக 22,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த அரிசியை தற்போது பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை இடம்பெற்று வருவதாகவும், அமைச்சரவை பேச்சாளரும், சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
மேலும் 10,000 மெற்றிக் தொன் அரிசி கிடைக்கவுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
தேவையை கருத்தில் கொண்டு அரிசி இறக்குமதிக்கான கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ள காலப் பகுதியை நீடிப்பதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அவர் தெளிவுபடுத்தினார்.