எதிர்காலத்தில் வர்த்தக வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் ஏதேனும் கணக்கு ஆரம்பிக்கப்பட்டால், ஆட்பதிவு திணைக்களத்தினால் வழங்கப்படும் தேசிய அடையாள அட்டை இலக்கம் கட்டாயம் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மேலும், தேசிய அடையாள அட்டை இலக்கம் வழங்கப்படாமல் ஏதேனும் கணக்கு தொடங்கப்பட்டிருந்தால், கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் தேசிய அடையாள அட்டை எண்ணை இம்மாதம் 31ஆம் திகதிக்கு முன்னதாக அந்தந்த வங்கிகளில் வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில கணக்கு வைத்திருப்பவர்கள் தேசிய அடையாள அட்டை இலக்கங்களுக்கு பதிலாக வெளிநாட்டு கடவுச்சீட்டு இலக்கங்கள் மற்றும் சாரதி அனுமதிப்பத்திர இலக்கங்களை வழங்கி வங்கி கணக்குகளை ஆரம்பித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், இலங்கையர் அல்லாத ஒருவர் செல்லுபடியாகும் வெளிநாட்டு கடவுச்சீட்டு இலக்கத்தை வழங்குவதன் மூலம் வர்த்தக வங்கி அல்லது நிதி நிறுவனத்தில் கணக்கை ஆரம்பிக்க முடியும்.
இந்த நிலையில், வர்த்தக வங்கி அல்லது நிதி நிறுவனம் வீழ்ச்சி இழப்பீடு பெற தேசிய அடையாள அட்டை எண் அவசியம் என மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.