யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் வெடிகுண்டு கண்டெடுப்பு
வத்திராயன் முருகன் கோயிலுக்கு அருகாமையிலுள்ள பகுதியில், கடந்த 18ஆம் திகதி வீடு ஒன்றிற்கான அஸ்திவார பணிகள் நடைபெற்று வந்தபோது, மண்ணுக்குள் புதைந்திருந்த நிலையில் வெடிக்காத எறிகணை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
கட்டட பணிக்காக அஸ்திவாரம் தோண்டிய பணியாளர்கள், சந்தேகத்திற்கிடமான பொருளை கண்டதும் உடனடியாக வேலைநிறுத்தம் செய்து, சம்பவம் தொடர்பில் மருதங்கேணி பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.
தகவலை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார், வெடிகுண்டு போன்ற பொருளை பாதுகாப்புடன் மீட்டு எடுத்துச் சென்றுள்ளனர். இது கடந்த யுத்த காலத்தில் பயன்படுத்தப்பட்ட எறிகணையாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.