குருக்கள்மட புதைகுழி தொடர்பில் விசாரணை தேவை – ரவூப் ஹக்கீம் குறித்த விமர்சனங்கள் எழுகின்றன
குருக்கள்மட பகுதியில் காணப்படும் புதைகுழி தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், 1990களில் பல அமைச்சரவை பதவிகளை வகித்த ஹக்கீம், அந்த காலங்களில் இதுபோன்ற விவகாரங்கள் குறித்து எதுவும் வெளிப்படையாக உரையாடவில்லை என்பதே சுட்டிக்காட்டப்படுகிறது.
அதனை அடுத்து, தற்போது இவ்வாறு கருத்து தெரிவிப்பதன் மூலம், செம்மணி பிரச்னையைத் திசைமாறச் செய்யும் திட்டம் ஏதேனும் உருவாக்கப்பட்டிருக்க முடியுமா? என்பது குறித்து சந்தேகங்கள் எழுகின்றன.
இதேவேளை, தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், “தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரை ரவூப் ஹக்கீம் ஆறு தடவைகள் கிளிநொச்சியில் சந்தித்துள்ளார்” என தெரிவித்துள்ளார்.
அந்த சந்திப்புகளின் போது, ஹக்கீம் தனது தனிப்பட்ட சமையல்காரரை கூட அழைத்து வந்துள்ளதாகவும், அதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், விடுதலைப் புலிகளின் தலைவர் பல நல்லெண்ணங்களை பகிர்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.