உரும்பிராய் சிறுவர் உதைபந்தாட்ட அக்கடமியை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நாளை மறுதினம் (30) இடம்பெறவுள்ளது.
ஆசிரியர் கு.பிரசன்னா தலைமையில் உரும்பிராய் திருக்குமரன் விளையாட்டு மைதானத்தில் காலை 10.00 மணியவளவில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ஐஸ்வர் உமர் அவர்கள் கலந்து சிறப்பிக்க உள்ளார்.
அத்துடன் இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உப தலைவர் இ.ஆனோல்ட், வலிகாமம் உதைபந்தாட்ட லீக் தலைவர் இ.யுவராஜ் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.
மேலும் கெளரவ விருந்தினர்களாக வடமாகாண உடற்கல்வி டிப்ளோமா ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் மற்றும் மூத்த உதைபந்தாட்ட வீரர் வை.தர்மகுலநாதன் ஆகியோர் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.
சிறுவர்களின் விளையாட்டுத்திறனை ஊக்குவிக்க மேற்கோள்ளும் இவ் செயற்றிடம் சிறப்பானது என விளையாட்டு ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.