ஹெரோயின் கடத்தி விற்பனையில் ஈடுபட்ட யாழ் சொர்னாக்கா கைது!
ஹெரோயின் போதைப் பொருளை கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு சூட்சுமமான முறையில் கடத்தி விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண்ணொருவர் பெருமளவு போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் பேருந்து மூலம் போதைப்பொருட்களை கடத்தி யாழ்ப்பாணத்தில் தரகர்கள் மூலம் விற்பனை செய்வதில் பல நாட்களாக ஈடுபட்டிருந்தார் என யாழ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குற்றத்தடுப்பு பொலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் யாழ் அரியாலைப் பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 10 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன் பெறுமதி 5 தொடக்கம் 6 லட்சம் என போலீசார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.