“சிறுபான்மையினரை அடக்கவே பயங்கரவாத தடைச் சட்டம்”சந்திரிகாவின் சுடலை ஞானம்!
சிறுபான்மை மக்களை அடக்குவதற்காக ராஜபக்சாக்கள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை பயன்படுத்தினர், பயன்படுத்தி வருகின்றனர் என தெரிவித்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க.
பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி மேற்கொள்ளப்படும் கையெழுத்து சேகரிப்பில் நேற்று தனது ஒப்பற்ற வைத்த பின்னர் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்.
நாட்டுக்கு எதிராக, மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பயங்கரவாத செயற்பாடுகளை தடுக்கவே பயங்கரவாத தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் ராஜபக்சாக்கள் ஆட்சியில் சிறுபான்மை மக்களை அடக்குவதற்கு இந்த சட்டம் பயன்படுத்தப்பட்டது, பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போதைய ஆட்சிக் காலத்தில் அரசை விமர்சிப்போரை பழிவாங்கும் வகையிலும் இந்தச்சட்டம் பயன்படுத்தப்படுவதை நாம் காண்கிறோம். குற்றவாளிகளை தப்பிக்க விட்டு அப்பாவிகளை சிறையில் அடைப்பதற்கும் தற்போது ராஜபக்சக்களுக்கு இந்தச் சட்டம் துணை போகின்றது.
இவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது, எனவே தற்போதுள்ள பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும் அல்லது தற்போதைய காலத்திற்கு ஏற்றவாறு அது முழுமையாக திருத்தி அமைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.