உங்கள் அழகை குறைக்கும் கருவளையத்தை இலகுவில் நீக்கும் முறை!
கருவளையம் தற்போது பெரும்பாலானவர்களுக்கு பிரச்சினையாகவே உள்ளது.
மன அழுத்தம், சத்து குறைபாடு, பரம்பரையை தாண்டி பராமரிப்பின்மையாலும் இவை அதிகரிக்கும்?
இதை எப்படி போக்குவது என்று பார்க்கலாமா?
முகத்தை சுற்றி கருவளையம் வருவது இயல்பானது. சிலருக்கு தூக்கம் பற்றாக்குறையாக இருந்தால் வரும். இன்னும் சிலருக்கு அதிக மன உளைச்சல் காரணமாகவும் வரும். ஆனால் இவையெல்லாமே தற்காலிகமானது என்றாலும் உரிய பராமரிப்பு இல்லையென்றால் இவை அதிகரித்து அதிகப்படியான கறுப்பையும், கண்களுக்கு கீழ் வீக்கத்தையும் உண்டு பண்ணும்.
ஆரம்ப கட்டத்தில் எளிமையான பராமரிப்பை மேற்கொள்வதன் மூலம் அதிக பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம். கண்களில் இலகுவாக கருவளையம் முற்றாக நீங்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் பார்க்கலாமா?
முதலில் கண்களை சுத்தமான நீரில் கழுவி விடுங்கள். பிறகு சுத்தமான காட்டனை எடுத்து பன்னீரில் நனைத்து கண்களின் மீது வையுங்கள்.
கண்களுக்கு குளிர்ச்சியையும், கண்ணுக்கு கீழ் இமைகளில் உண்டாகும் வீக்கத்தையும் வரவிடாமல் செய்யும்.
5 நிமிடங்கள் வரை வைத்து இந்த காட்டனை அகற்றிவிடுங்கள்.
வெள்ளரிக்காயை வட்ட வடிவில் வெட்டி கண்களின் மீது வையுங்கள். ஆனால் பலன் விரைவாக கிடைக்க வேண்டுமென்றால் வெள்ளரிக்காயுடன் சம அளவு தக்காளி சேர்த்து நீர்விடாமல் அரைத்து கண்களின் மீது பற்று போடலாம்.
நேரடியாக கண்களின் மீது இந்த கலவையை தடவும் போது அவை கண்களுக்கு ஊடுருவும் வாய்ப்பு உண்டு. அதனால் கண்களின் மேல் ஒரு மெல்லிய துணியை வைத்து அதன் மீது அந்த கலவையை தடவ வேண்டும். இந்த கலவையில் காட்டனை ஊறவைத்தும் கண்களில் தடவி எடுக்கலாம்.
குளிர்ந்த கலவையான வெள்ளரி தக்காளியின் சாறை எடுத்து கண்களின் மீது சற்று கனமாக போடவேண்டும். 10 நிமிடங்கள் கழித்து மெதுவாக அந்த கலவையை எடுத்து பிறகு கண்களில் மாற்றத்தை காணலாம்.
ஆரஞ்சு, வாழைப்பழத்தோல் இருந்தால் அதில் இருக்கும் நாரை நீக்கி கொள்ள வேண்டும். பிறகு அதை வெள்ளரி சாறோடு நனைத்து கண்கள் மீது வைத்து கண்களை மூடி கொள்ளவும்.
10 நிமிடங்கள் வரை கண்களை அசைக்காமல் வைத்திருந்து எடுத்தால் கண்களில் இருக்கும் உஷ்ணத்தை பழத்தோலில் உணரலாம். கண்களில் கருவளையம் இருப்பவர்கள் மட்டுமல்ல கண்களில் புத்துணர்ச்சி தருவதற் கும் கூட இவை பெரிதும் உதவும்.
குறிப்பாக கம்ப்யூட்டர் பணியில் கண்களுக்கு அதிக வேலை தரும் பணியில் இருப்பவர்கள் வாரம் மூன்று நாள் இப்படி செய்வது கண்களில் இருக்கும் சோர்வை விரட்டி புத்துணர்ச்சி அளிக்கும்.