அதிக விலைக்கு முட்டை விற்பனையில் ஈடுபட்ட வர்த்தகர் ஒருவருக்கு ஒரு லட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஒரு முட்டையை 60 ரூபா என்ற அடிப்படையில் ஐந்து முட்டைகளை 300 ரூபாவுக்கு விற்பனை செய்த வர்த்தகருக்கு இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளார்.
அம்பாந்தோட்டை மாவட்ட மாவட்ட நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த வர்த்தகர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.
இதன்போது இதன்போது வர்த்தகருக்கு ஒரு இலட்சம் ரூபாய் தண்டம் விதித்து நீதிமன்று தீர்ப்பளித்தது.