பாற்சோறு உண்டு மகிழ்ந்த மக்கள் வீதிக்கு தள்ளப்பட்டுள்ளனர்- ஆனந்த தேரர்!
சிறிலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை வெற்றிபெறச் செய்து பாற்சோறு உண்டு மகிழ்ந்த மக்கள் இன்று வீதிக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்று அபயராம விகாராதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியவர்கள் என்ற ரீதியில் எதிர்வரும் 31ம் திகதி மகாசங்கத்தினரை ஒண்றிணைத்து எவரும் எதிர்பாராத தீர்மானத்தை அறிவிக்கவுள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.