யாழ் வல்லைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயம்!
பருத்தித்துறையிலிருந்து யாழ்ப்பாண நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த ஒருவரை பருத்தித்துறை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கார் மோதி தள்ளியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் குதிகால் அறுந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
வல்லைப் பாலத்தில் மழை காரணமாக ஏற்பட்ட வழுக்கு நிலையினால் கார் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளியது. மோதிய கார் எதிரே உள்ள பாலத்திற்குள் விழுந்து முழுதாக சேதம் அடைந்தது. இருப்பினும் காரில் பயணித்த சாரதி தெய்வாதீனமாக உயிர் தப்பினர்.
மோட்டார் சைக்கிளும், முற்றாக சேதமடைந்ததுடன் பாலத்தில் தூக்கி வீசப்பட்டு அவரது குதிக்கால் பாலத்துடன் செருகி அறுந்துள்ளது.
குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.