நீர் இறைக்கும் இயந்திரங்களை திருடிய குற்றச்சாட்டில் 4 பேர் கைது!
தெல்லிப்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கட்டுவான் பகுதிகளில் அண்மைக்காலமாக நீர் இறைக்கும் மின் மோட்டார்கள், நீர் பம்பிகள் திருடப்பட்டு வந்துள்ளன.
இது தொடர்பில் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் உரிமையாளர்களால் முறைப்பாடுகள் செய்யப்பட்டு வந்த நிலையில் அது தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் நான்கு பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து சுமார் 5 இலட்ச ரூபாய் பெறுமதியான 7 நீர் இறைக்கும் மின் மோட்டார்கள் மீட்கப்பட்டுள்ளது.