விடுதலைப் புலிகள் காலத்தில் நிலத்தில் புதைக்கப்பட்ட பாரிய எண்ணெய்த் தாங்கி இன்று (31) மீட்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாரம்பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றிலிருந்தே இந்த பாரிய எரிபொருள் தாங்கி மீட்கப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு பொலிஸார் மற்றும் இராணுவத்தினருக்கு கிடைத்த தகவலையடுத்து முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜாவின் நீதிமன்ற அனுமதியுடன் தோண்டும் நடவடிக்கை இன்று காலை முன்னெடுக்கபட்டது.
இதன்போதே 16.3 அடி நீளமும்,7.9அடி விட்டமும் கொண்ட பெரிய எரிபொருள் தாங்கி எரிபொருளற்ற நிலையில் மீட்கப்பட்டது.