யாழில் துயரம்! தூக்கில் தொங்கிய நிலையில் யுவதி சடலமாக மீட்பு!
யாழ்ப்பாணம் கலட்டி பகுதியில் யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச் சம்பவம் நேற்று காலை 11 மணியளவில் நிகழ்ந்துள்ளது.
சிவகுமாரன் நிருத்திகா எனும் 24 வயதான யுவதியே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. மரண விசாரணையினை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.