சீனாவின் வடமேற்கு பகுதியில் 5.9 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவிசரிதவியல் நிலையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தில் சிக்கி குறைந்தது 111 பேர் உயிரிழந்துள்ளதுடன், 220 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அரச ஊடகம் செய்தி வௌியிட்டுள்ளது.
Gansu மாகாணத்தில் நேற்று(18) நள்ளிரவு வேளையில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. அதனையடுத்து இன்று(19) அதிகாலை முதல் மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும் பிராந்தியத்தின் சில பகுதிகளில் மின்சாரம் மற்றும் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.
இதேவேளை சீனாவின் தென்மேற்கே உள்ள Sichuan மாகாணத்தில் கடந்த செப்டம்பரில் ஏற்பட்ட 6.6 மக்னிடியூட் அளவில் பதிவாகிய நிலநடுக்கத்தினால் 60-இற்கும் அதிகமானோர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.