வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை வழக்கு எதிர்வரும் ஜனவரி 2ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதேவேளை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த முன்னர் உயிரிழந்தவர் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தெல்லிப்பளை சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை, மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்த நபரை அனுமதித்தமை தொடர்பான மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்க ஆவண செய்யுமாறு நீதிமன்ற பதிவாளருக்கு யாழ்ப்பாணம் நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா உத்தரவிட்டார்.
மரண விசாரணை தொடர்பான கட்டளைக்காக எதிர்வரும் ஜனவரி 2ம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. வழக்கில் உயிரிழந்த இளைஞன் சார்பில் பெருமளவான சட்டத்தரணிகள் ஆஜராகினர்.வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன் சித்திரவதைகளுக்கு உள்ளான நிலையில் நவம்பர் 19ஆம் திகதி உயிரிழந்தார்.