ஐஸ்லாந்து நாட்டின் ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் உள்ள எரிமலை வெடித்து சிதற ஆரம்பித்துள்ளது.
கடந்த ஒரு வாரமாக குமுறிக் கொண்டிருந்த நிலையில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை வெடித்து சிதறியுள்ளது.
கிரின்டாவிக் நகரத்தில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த எரிமலை நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை (18) இரவு முதல் வெடிக்க ஆரம்பித்து தீப்பிழம்பை கக்கி வருகிறது.
எரிமலை வெடிப்பு காரணமாக கிரின்டாவிக் பகுதியில் வசிக்கும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள், அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். மேலும் அவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகலில் எரிமலை வெடிப்பு கணிசமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எரிமலை வெடிப்புக்கு சில மாதங்களுக்கு முன்பு ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பகத்தில் ஆயிரக்கணக்கான நிலநடுக்கங்கள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.