2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தாரதர உயர்தரப் பரீட்சை நாளை (07) ஆரம்பமாகவுள்ளது.
இப் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.
நாளை (07) ஆரம்பமாகும் உயர்தரப் பரீட்சை எதிர்வரும் மார்ச் மாதம் 5 ஆம் திகதி வரை இடம்பெற உள்ளதுடன் 2437 பரீட்சை நிலையங்களில் பரீட்சை இடம்பெறவுள்ளது.
இப்பரீட்சைக்கு நாடளாவிய ரீதியில் 345 242 பரீட்சார்த்திகள் இப் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.
கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு விசேட பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.