பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல்!
சுண்ணாகம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் மீது உரும்பிராய் பகுதியில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்று முன்தினம் (29) காலை உரும்பிராய் யோகபுரம் பகுதியில் நிகழ்ந்துள்ளது.
சுண்ணாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நிகழ்ந்த களவு சம்பவம் தொடர்பில் சந்தேகநபரைக் கைது செய்வதற்காக குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் சென்ற சந்தர்ப்பத்தில் சந்தேகநபர் மற்றும் அவரது உறவினர்களால் பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் 5பேர் கோப்பாய் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.