கோத்தா ஆதரவாளர்களுக்கு ‘புல்லும் புண்ணாக்கும்’ வழங்கிய மக்கள்!
இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிற்கு ஆதரவாக நேற்றைய தினம் அனுராதபுரத்தில் பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பேரணி நடைபெறும் பகுதியில் ‘பேரணியில் கலந்துகொள்பவர்கள் உட்கொள்வதற்கு’ என அறிவித்தல் பதாகை வைக்கப்பட்டு புல், புண்ணாக்கு, களனித்தண்ணி போன்ற கால்நடைத் தீவனங்கள் வைக்கப்பட்டிருந்தன.
குறித்த கோத்தா ஆதரவு பேரணியில் 50 பேருக்கும் குறைவானவர்களே கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.