நோயாளர் காவு வண்டி மோதி சிறுவன் பலி!
பூனகரி செம்மன்குன்றுபகுதியில் நேற்றைய தினம்( 23)மாலை நோயாளர் காவுவண்டி மோதி சிறுவன் உயிரிழப்பு.
பாண் கொள்வனவு செய்துவிட்டு வீதியை குறுக்கறுத்து ஓடிச் சென்ற பொழுது முழங்காவில் வைத்திய சாலையில் இருந்து பூநகரி செம்மன்குன்று பகுதிக்கு நோயாளி ஒருவரை ஏற்றுவதற்காக விரைந்து சென்ற நோயாளர் காவுவண்டி சிறுவன் மீது மோதியதில சிறுவன் படுகாயமடைந்துள்ளார்.
படுகாயமடைந்த நிலையில் பூனகரி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற பொழுது சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்துள்ளார்.
யோகநாதன் நிலோஜன் எனும் 09 வயதுடைய சிறுவனே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக பூனகரி பொலீஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.