இந்தியாவில் தலைதூக்கி வரும் கொரோனாத் தோற்றால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 104 ஆக உயர்ந்துள்ளதாக இந்தியாவின் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
இந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் வாரத்தில் சிங்கப்பூரில் ஒரே நாளில் 3 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.
அந்த அதிர்வு ஓய்வதற்குள் கடந்த 14 ஆம் திகதி கேரள மாநிலத்தில் ஒரே நாளில் 280 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது, அவர்களின் குருதி மாதிரி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது அது ‘ஜே.என்.- 1’ என்ற உறுமாறிய புதுவகை கொரோனா வைரஸ் என தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து வேகமாக பரவி வந்த இந்த திரிப்படைந்த வைரஸ் தொற்று தமிழ் நாட்டிலும் பரவலடைய ஆரம்பித்துள்ளது.
அதன்படி, சென்னை மாவட்டத்தில் 14 பேருக்கும், திருவாரூர் மாவட்டத்தில் 3 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 2 பேருக்கும், கோவை, திருவள்ளூர், திருவண்ணாமலை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் என 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதில் 8 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், மேலும் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 104 ஆக அதிகரித்துள்ளது. ஆனால் இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.