மன்னார் – பேசாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையை இன்று (22.12.2023) காலை முதல் பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து முன்னெடுத்துள்ளனர்.
பிரதி பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கு அமைவாக நாட்டில் உள்ள அனைத்து மாகாணங்களிலும் போதைப்பொருள் சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையிலே பேசாலை பொலிஸ் பிரிவில் குறித்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன்போது போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றவர்கள் தொடர்பாகவும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் சில போதைப்பொருட்களும் சோதனை நடவடிக்கையின் போது மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.