வலைப்பந்தாட்ட அனைத்து பிரிவிலும் சம்பியன் கிண்ணத்தை தனதாக்கியது அராலி சரஸ்வதி இந்துக் கல்லூரி !
வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் 200 ஆவது ஆண்டை முன்னிட்டு நடத்தப்பட்ட பாடசாலை அணிகளுக்கிடையிலான வலைப்பந்தாட்டப் போட்டியில் அனைத்துப் பிரிவிலும் முதலாம் இடத்தைப் பெற்று சம்பியன் கிண்ணத்தை தனதாக்கி அராலி சரஸ்வதி இந்துக்கல்லூரி வரலாற்றுச் சதனையைப் பதிவு செய்துள்ளது.
வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் 200 ஆவது ஆண்டை முன்னிட்டு நடத்தப்பட்ட வலைப்பந்தாட்ட போட்டியின் இறுதிச் சுற்று நேற்று முன்தினம் புதன்கிழமை கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
19 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான இறுதியாட்டத்தில் அராலி சரஸ்வதி இந்துக்கல்லூரி அணியை எதிர்த்து உடுவில் மகளிர் கல்லூரி அணி மோதியது.
இதில் அராலி சரஸ்வதி இந்துக்கல்லூரி அணி 24:15 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டது.
17 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான இறுதியாட்டத்தில் அராலி சரஸ்வதி இந்துக்கல்லூரி அணியை எதிர்த்து யாழ்ப்பாண கல்லூரி அணி மோதியது.
இதில் அராலி சரஸ்வதி இந்துக்கல்லூரி அணி 10:05 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டது.
15 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான இறுதியாட்டத்தில் அராலி சரஸ்வதி இந்துக்கல்லூரி அணியை எதிர்த்து யாழ்ப்பாண கல்லூரி அணி மோதியது.
இதில் அராலி சரஸ்வதி இந்துக்கல்லூரி அணி 09:02 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டது.
இதனடிப்படையில் மூன்று சம்பியன் கிண்ணத்தைக் கைப்பற்றி வெற்றி வாகை சூடியது அராலி சரஸ்வதி இந்துக்கல்லூரி.