யாழ் வலிகாமம் பகுதியில் குளித்துக் கொண்டிருந்த குடும்பப் பெண் ஒருவரை மரம் ஒன்றில் ஏறி ரசித்துக் கொண்டிருந்ததாக கூறி, பிரபல பாடசாலையில் கற்கும் 17 வயதான மாணவன் தாக்கப்பட்டுள்ளான்.
மாணவன் தான் செய்தது தவறு என கூறிய பின்னா் மாணவனை பொலிசில் ஒப்படைக்காது அப்பகுதியில் உள்ளவர்கள் விடுவித்துள்ளார்கள்.
மாணவன் வீட்டுக்குச் செல்லாது தனது நண்பனின் வீடு ஒன்றிற்கு சென்றுள்ளான். முகம் வீங்கிய நிலையிலும் முழம் கால்களுக்கு கீழ் தடியால் அடித்த காயங்களுடனும் நண்பன் நின்றதால் அது எதனால் ஏற்பட்டது என கூறியும் அவன் பதிலளிக்கவில்லை.
நண்பனின் பெற்றோர் அவனது குடும்பத்தவர்களுக்கு தகவலை வழங்கிய நிலையில் தாய் அவனிடம் விளக்கம் கேட்டபோதும் மாணவர் மௌனம் காத்துள்ளார்.
இதனையடுத்து அங்கு வந்த தந்தை மகனிடம் அச்சுறுத்தி கேட்ட போது மாங்காய் பறிக்க ஏறிய போதே தன்னை தாக்கியதாகவும் கூறிய நிலையில் பெரும் அல்லோலகம் ஏற்பட்டுள்ளது.
தாக்கியவர்களை திருப்பி தாக்குவதற்கு தந்தை மற்றும் மாணவனின் உறவுகள், அயலவர்கள் அங்கு விரைந்துள்ளனர்.
அதன் பின்னரே மாணவனுக்கு தாம் எதற்காக அடித்தோம் என விளக்கம் கொடுக்கப்பட்டதுடன் மாணவன் மன்னிப்பு கேட்கும் வீடியோ ஒன்றையும் மாணவனின் தந்தை மற்றும் உறவுகளுக்கு காட்டியுள்ளார்கள்.
எனினும் மாணவனுக்கு அடித்தது தப்பு என கூறி மாணவனை பொலிஸில் முறையிட்டுள்ளார்கள்.
தாம் ஒடுக்கப்பட்ட சாதியினர் என்றும் தனது மகன் உயர்சாதியினரின் மாமரத்தில் ஏறியதால் அவர்கள் தமது மகனை தாக்கிய பின் மாணவன் குளிப்பதை பார்த்ததாக அச்சுறுத்தி மன்னிப்பு கேட்கச் செய்ததாகவே பொலிசாருக்கு முறையிட்டுள்ளர்.
பொலிசார் விசாரணைகளை மேற்கொண்ட போது, மாணவன் மரத்தில் ஏறி அயல் வீட்டை நோட்டம் இட்டுக் கொண்டிருந்த சிசிரீவி காட்சிகள் மற்றும் மாணவன் தான் எதற்காக மரத்தில் ஏறினேன் என கூறி மன்னிப்பு கேட்கும் காட்சிகளும் பொலிசாருக்கு காட்டப்பட்டன.
சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு சென்ற பொலிசார் மாணவன் ஏறிய மாமரம் எந்தவித காய்களும் அற்ற மரம் என்பதையும் அவதானித்து மாணவனிடத்தில் இது தொடர்பாக கேட்ட போது மாணவன் உண்மையை ஒத்துக் கொண்டுள்ளான்.
இதனையடுத்து சாதி ரீதியாக தேவையில்லாமல் பிரச்சனையை வளர்க்க முற்பட்டதாக கூறி மாணவன் தரப்பினரை பொலிசார் கடுமையாக எச்சரித்துள்ளதாக கூறப்படுகின்றது.