யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பகுதியில் தனியார் விடுதியில் தங்கியிருந்த இரண்டு பெண்கள் மற்றும் விடுதி உரிமையாளர் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த விடுதியில் தொடர்ச்சியாக சமூக சீரழிவுகள் நடந்து வருவதாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டினையடுத்து குறித்த கைது சம்பவம் நிகழ்ந்துள்ளது.
விடுதியில் தங்கியிருந்த பெண்கள் தெகிவளையை சேர்ந்தவர்கள் எனவும் விபச்சாரத்தில் ஈடுபட்டதாகவும் மணித்தியாலத்திற்கு 6000 ரூபா என விடுதி உரிமையாளரால் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் உள்ள விடுதிகள் பலவற்றில் இதேபோல் வேறு மாவட்டத்திலிருந்து விபச்சாரத்திற்கென அழைத்துவரப்பட்டு விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
யாழ் நகரில் பல விடுதிகள் பதிவு செய்யப்படாமல் சில அதிகாரிகளின் அணுசரணையுடன் இயங்குவதாகவும் விபச்சாரம் தாராளமாக இடம்பெறுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.