அமெரிக்க சுற்றுலா பயணிமீது பரிசில் தாக்குதல்!
அமெரிக்காவைச் சேர்ந்த சுற்றுலாப்பயணி ஒருவர் தாக்கப்பட்டு அவர் அணிந்திருந்த தங்க நகை கொள்ளையிடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் பரிஸ் 1 ஆம் வட்டாரத்தில்
இடம்பெற்றுள்ளது.
அதிகாலை 2 மணி அளவில் குறித்த வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்த குறித்த சுற்றுலாப்பயணியை வழிமறித்த கொள்ளையன், அவரை கத்தியால் தாக்கியுள்ளான். பின்னர் அவர் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளான்.
பாதிக்கப்பட்ட நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் அமெரிக்காவைச் சேர்ந்தவர் எனவும் சில நாட்களுக்கு முன்னதாகவே பரிசுக்கு வருகை தந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.