வடமாகாண வைத்தியசாலைகளில் கடமை புரிவதற்கு புதிதாக 54 வைத்தியர்கள் சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆர்.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
“மத்திய சுகாதார அமைச்சினால் புதிதாக 54 வைத்தியர்கள் வடமாகாணத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 15 வைத்தியர்கள் யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு உட்பட்ட வைத்தியசாலைகளுக்கும், 14 வைத்தியர்கள் மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கும், 10 வைத்தியர்கள் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கும், 8 வைத்தியர்கள் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைகக்கும், 7வைத்தியர்கள் வவுனியா மாவட்ட வைத்தியசாலைக்கும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்”.