நீரில் மூழ்கி நால்வர் உயிரிழப்பு! ஒருவர் மாயம்!
நீர் வீழ்ச்சியில் நீராடிய ஐவர் நீரில் மூழ்கிய நிலையில் நால்வர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். ஒருவர் காணாமல் போன நிலையில் தேடும் பணி தொடர்கிறது.
உமா ஓயா கெரண்டி எல்ல நீர்வீழ்ச்சியில் 11 பேர் நீராடிய நிலையில் ஐவர் நீரில் இழுத்துச் செல்லப்பட்டனர். இவர்களில் நால்வர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். ஒருவர் காணாமல் போன நிலையில் தேடுதல் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் அண்மைக் காலமாக நீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்துச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.