கள்ள ‘சிம்’ வைத்து கடலை போடுபவர்களுக்கு ஆப்பு!
சிம் அட்டைகளை பதிவு செய்வதுடன் புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்காக அரசாங்கம் ஆலோசித்து வருகிறது என பொதுப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
நீதி அமைச்சர் அலி சப்ரி மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் ரியல் அட்மிரல் சரத் வீரசேகர ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போது இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
ஒரு நபரின் பெயரில் பல சிம் அட்டைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சிலருக்கு தமது பெயரில் சிம் அட்டைகள் பதிவுசெய்யப்பட்டிருப்பது தெரியாது. இறந்தவர்களின் பெயரில் கூட சிம் அட்டைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இவற்றைக் கருத்தில் கொண்டு சிம் அட்டைகளை பதிவு செய்வதை ஒழுங்குபடுத்துவதற்கு புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது என்று பொதுப் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.