யாழில் பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்த சிறுமி!
யாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் 12 வயதான சிறுமி ஒருவர் தஞ்சமடைந்துள்ளார். தந்தை தினமும் மது போதையில் வீட்டுக்கு வந்து தகராறில் ஈடுபடுகிறார், இதனால் நிம்மதியாக இருக்க முடியவில்லை, என்று தெரிவித்து 12 வயதுச் சிறுமி ஒருவர் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளார்.
பொலிஸார் குறித்த சிறுமியை கோப்பாய் பிரதேச செயலக நன்னடத்தைப் பிரிவினரிடம் ஒப்படைத்தனர். தரம் 7 இல் கல்வி கற்கும் 12 வயது சிறுமியே பொலீஸாரிடம் தஞ்சமடைந்துள்ளார். மது போதையில் வரும் தந்தை தினமும் தாயுடன் சண்டை பிடிக்கிறார் என்றும், தன்னுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார் என்றும் பொலீஸாரிடம் தெரிவித்துள்ள சிறுமி அதனால் தன்னால் வீட்டில் நிம்மதியாக இருக்க முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.
சிறுமி வீட்டின் மூத்த பிள்ளை என்றும், இவரை விட இன்னும் இரு பிள்ளைகள் உள்ளனர் என்றும் பொலீஸார் தெரிவித்தனர். மேலதிக நடவடிக்கைக்காக சிறுமியை பொலீஸார் கோப்பாய் பிரதேச செயலக நன்னடத்தைப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.