யாழில் புகையிரத பாதையில் டயர்களை எரித்து மக்கள் போராட்டம்!
யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் பாதுகாப்பான புகையிரத கடவையை அமைத்துத் தருமாறு கோரி ரயில் பாதையில் டயர்களை எரித்து மக்கள் போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.
மிருசுவில் பகுதியில் நேற்றைய தினம் குறித்த பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மகன் மற்றும் மகள் ஆகியோர் உயிரிழந்த நிலையில் பாதுகாப்பான புகையிரத கடவையை அமைத்துத் தருமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் பாதுகாப்பு கடவை அமைக்கும்வரை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அவ்விடத்தில் கடமையில் ஈடுபடுவார் என தெரிவித்தனர். இதனையடுத்து நிலமை சுமூகமாகியது.